அவரது பேட்டி:சென்னை பல்கலையிலும், அதன் ஐந்து இணைப்பு கல்லுாரிகளிலும், பாதுகாப்பு துறை தொடர்பான படிப்பு
நடத்தப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த படிப்பு முடித்தவர்களுக்கு, பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களில்
வேலைவாய்ப்புகள் உள்ளன.பல்கலையின் மற்ற பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களுக்கும், 'கேம்பஸ்' என்ற வளாக நேர்காணல் நடத்த ஏற்பாடு
செய்து வருகிறோம்.
அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள், தங்களின் பணியாளர்கள் மற்றும்
பேராசிரியர்களுக்கு, அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியம் வழங்க
வேண்டும். விதிகளை மீறும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லுாரி மாணவர்களுக்கான அனைத்து ஆன்லைன்
பாடங்களையும், தமிழில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 'தொலைக்காட்சி வழியே தொல்காப்பியம்' என்ற திட்டத்தில் தொல்காப்பியம்
குறித்த வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.பள்ளி முதல் பல்கலை வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்வியை நவீனப்படுத்தும்
வகையில்,
பல்வகை ஊடக
ஆராய்ச்சி மையம் என்ற டிஜிட்டல் மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையம் 6 கோடி ரூபாயில், முன்னாள் முதல்வர் கருணாநிதி
பெயரில் அமைக்கப்படும். அதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மேலும், ஆன்லைன் கல்வி தொடர்பாக, டிப்ளமா மற்றும் சான்றிதழ்
படிப்புகள் நடத்தப்பட உள்ளன. மதுரவாயலில் உள்ள தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில், மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கவுரி கூறினார்.
0 Response to "ஆன்லைன்' கல்வியை நவீனமாக்க திட்டம் சென்னை பல்கலையில் டிஜிட்டல் மையம்"
Post a Comment