பொதுவாக சோர்வு என்பது குறைவான தூக்கம், வைரஸ் தொற்று, அதிக வேலை அல்லது சில
மருந்துகளின் பக்கவிளைவு காரணமாக ஏற்படலாம். ஆனால் நீங்கள் ஒரு அசாதாரணமான அல்லது
தீவிர சோர்வு பிரச்சனையை தொடர்ந்து அனுபவித்து வருகிறீர்கள் என்றால், இது மாரடைப்புக்கான
ஆரம்பகால அறிகுறியாகவோ அல்லது இதய நோய்க்கான எச்சரிக்கை அறிகுறியாகவும்
இருக்கலாம். 70
சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாரங்கள் அல்லது சில
நாட்களுக்கு முன்னர் அதிக சோர்வினை அனுபவித்து வருகின்றனர் என்று ஆய்வில்
தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்
ஆல்கஹால் உட்கொள்ளுதலை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
பெரும்பாலும் பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் நோயின் அறிகுறிகளை
புறக்கணிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது இருதய பாதிப்பின் அறிகுறிகளுக்கு
வேறு ஏதாவது காரணம் கூறி புறக்கணிக்கிறார்கள். தொடர்ந்து உங்களுக்கு அசாதாரண
சோர்வு மற்றும் வலி, அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் அதை
புறக்கணிக்கக் கூடாது. மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நமக்கு
எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட கூடும் என்று ஆய்வு கூறுகிறது. இதை நீங்கள் சரியான
நேரத்தில் கண்டறிந்தால் உங்கள் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவியை நாட முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும்முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்"
Post a Comment