அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை

Trending

Breaking News
Loading...

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை

 



அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது.
 
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் 2008-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்டு ஒரு ஊழியருக்கு ரூ.20 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்தும், தமிழக அரசு சார்பில் சேவைவரி 12.5 விழுக்காடு பங்களிப்பு செய்தும் 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு வழங்கப்பட்டது.
 
அதன் பின்பு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2012-2016ஆம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.150 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்தும், தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு சேவைவரிரூ.290ஃ- (150×12=1800+290=2090) பங்களிப்பு செய்தும்ரூ.4 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டது.
 
அதன்பின்பு 2016-2020ஆம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அரசாணை எண்.202 நிதித்துறை நாள்.30.6.2016-ன் படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.180 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ததுடன் தமிழக அரசின் பங்களிப்பு ஏதுமின்றி ஆசிரியர் – அரசு ஊழியர்களின் பிரிமியத் தொகையிலிருந்தே ரூ.4 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீடு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவைச்சிகிச்சைகளுக்கு ரூ.லட்சம் எனவும் உச்சவரம்பு நிர்ணயித்து ஆணையிடப்பட்டது.
 
தற்போது அரசாணை எண்.160 நாள்.29.6.2021இன் படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – 2021ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஊழியருக்கு ரூ.300, (295+5=300) வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நடைமுறைப்படியே ஆசிரியர் – அரசு ஊழியர்களின் பிரிமியத் தொகையிலிருந்தே ரூ.5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் எனவும் உச்சவரம்பு நிர்ணயித்து ஆணையிடப்பட்டுள்ளது.
 
அத்துடன் அரியவகை நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பாக அதிக செலவுகளை சந்திப்பதற்காக கார்பஸ் நிதியை உருவாக்க ரூ.300 பிரிமியத் தொகையிலிருந்து ரூ.5 பிடித்தம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
 
ஆகவே, தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்காக எவ்வித தொகையையும் பங்களிப்புச் செய்யவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும், அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
இருப்பினும், தமிழ்நாடு அரசு அரசாணை எண்.160 நாள்.29.06.2021-ன் படி புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்-2021 ல் கீழ்க்கண்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை சேர்த்து முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திருத்திய புதிய அரசாணை வெளியிட வேண்டுகின்றோம்.
 
மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் – 2021இல் கூடுதாலகச் சேர்க்கப்பட வேண்டியவை:
 
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் முதல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆசிரியர்-அரசு ஊழியர்களிடம் விருப்பக் கடிதம் கேட்கப்பட்டதைப் போன்று தற்போதைய திட்டத்திலும் ஆசிரியர்-அரசு ஊழியர்களிடம் விருப்பக்கடிதம் கேட்கப்பட வேண்டும்.
 
பிரீமியம் தொகையில்60மூ உயர்த்தப்பட்டது போன்று மருத்துவக்காப்பீடு லட்சமாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ. 15 லட்சம் எனவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
 
அறுவை சிகிச்சையின் போது இரத்தக் கொடை கொடுப்பவருக்கு ஆகும் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ செலவுகளை மருத்துவக் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும்.
 
குடும்பம் என்பதில் கணவன், மனைவி, குழந்தைகள் (வயது-25 என்பதை ரத்து செய்து விட்டு திருமணம் ஆகும் வரை), பெற்றோர்கள், வளர்ப்பு மற்றும் தத்து குழந்தைகள், விதவை, விவாகரத்துப் பெற்ற ஆண், பெண் குழந்தைகள் ஆகியோரை இத்திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
 
மருத்துவச்சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்கி பேக்கேஜ் என்று இல்லாமல் தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கமான 100 விழுக்காடு ‘கட்டணமில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 
தற்போதைய அரசாணையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 மற்றும் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000 என பேக்கேஜ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிர்ணயம் கட்டணமில்லா சிகிச்சை என்ற அரசின் நோக்கத்திற்கு முரணாக உள்ளது. இந்த சிகிச்சைகளுக்கு Pயஉமயபந நிர்ணயம் செய்யக்கூடாது என வலியுறுத்துகின்றோம்.
 
தற்போது NHIS-ல் உள்நோயாளி சிகிச்சை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வெளிநோயாளி சிகிச்சை மற்றும் ஓராண்டு கண்காணிப்பு சிகிச்சை அனுமதிக்கப்பட வேண்டும்.
 
NHIS-ல் கீழ்க்காணும் நோய்களுக்கான சிகிச்சைகள் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
 
Oral Chemotherapy, குடல் ஒட்டு அறுவை சிகிச்சை மற்றும் அனைத்து நவீன சிகிச்சை முறைகள். காரணமில்லா இரத்தப் போக்கு (Idiopathic Thrombocytopenia Purpura ITP), சிக்குன் குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல், கரும்பூஞ்சை மற்றும் பருவகால தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள் இணைக்கப்பட வேண்டும்.
 
காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக மாவட்ட மாநில அளவில் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் குறைதீர் கூட்டத்தினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். அக்கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக பத்திரிக்கை வாயிலாக ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் குறைதீர் கூட்டங்களுக்கு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.
 
தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவக்காப்பீடு பெற இயலாத நோயாளிகள் மீள மருத்துவக்காப்பீட்டை பெற குறைதீர் அலுவலரை அணுகிப் பெற விண்ணப்பிக்கும் கால அளவை 30 நாட்களிலிருந்து 90 நாட்களாக உயர்த்திட வேண்டும்.
 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் முன்பணம் கேட்பதை தடை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
 
சிகிச்சையில் இருக்கும் போது அரசு தரப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள குறைதீர் அலுவலரை தொடர்பு கொள்ள கைபேசி எண்களை வெளியிட வேண்டும்.
 
ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மருத்துவக்காப்பீட்டு திட்டத்தினை அவமதிக்கும் வகையில் நோயுறும் ஆசிரியர்-அரசு ஊழியர்களை கொரானா பெருந்தொற்று காலத்தில் அனுமதிக்க மறுத்தமருத்துவமனைகள் மற்றும் எதிர்காலத்தில் அனுமதிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கைகள்எடுக்கும் வகையில் தற்போது வெளியிடப்ப்பட்டுள்ள அரசாணையில் விதிகள் இடம்பெற வேண்டும்.
 
எனவே,தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கமான ‘கட்டணமில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்திடவும்,12 இலட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட ஆசிரியர்-அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை இத்திட்டத்தில் இணைத்து சிறந்ததொரு புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டம்-2021 அமைந்திட திருத்திய அரசாணையை வெளியிட்டு உதவிட வேண்டுமாய் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Response to "அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel