
DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை
mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop
அல்லது laptop களின் வழியே
திரைவீழ்த்திகளில் மாணவர்களுக்கு
பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.
இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு
மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்.
1. https://diksha.gov.in/explore
என்ற இணைய தளத்திற்கு செல்லவும். (தங்களின் google chrome
browser ல்)
2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின் பெயரை டைப் செய்யவும்.
எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக structure
காண 10_maths என DIKSHA explore- search bar ல் type செய்யவும்.
3. குறிப்பிட்ட பாடநூலில் உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு
வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும்.
4. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில் தங்களுக்கு தேவையானதை play செய்யவும்.
5. Play ஆகும்
போது வீடியோவின் கீழே download symbol காட்டும் அதனை
தொடுவதன் மூலம் அந்த வீடியோவை mp4 ஆக பதிவிறக்கம் செய்துக்கொள்ள
முடியும்.
6. அதனை நீங்கள் mobile ல் download செய்திருந்தால் data cable மூலமாக laptop/desktop க்கு மாற்றி பள்ளிகளில் உள்ள
திரை வீழ்த்திகளில் வீழ்த்தி
பயன்படுத்தலாம்.
Note : பாடநூல் இருப்பின் ஏதேனும் ஓர் qr
scanner (e.g. maxthon browser) மூலமாக scan செய்து குறிப்பிட்ட content ஐ நேரடியாகவும் download செய்து பயன்படுத்தலாம்.
குறிப்பு : இவை state
level content team create அல்லது edit செய்த content
கள் என்பதால் இவற்றை மீண்டும் தங்கள் Youtube account ல் பதிவேற்றம் செய்து share செய்வதையோ , அதன் மூலம் வருமானம் பெருவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.
இன்னும் சில மாதங்களில் chrome UI கொண்டு மொத்த book
structure ஐயும் download செய்து offline
ல் பயன்படுத்தும் option வரும் என்பதால்
தேவையில்லாமல் வீடியோக்களை download
செய்து share செய்வதையும் தவிர்க்கவும்.
தனிப்பட்ட download களுக்காக மட்டும் இந்த வசதியை
பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
இப்படிக்கு.
இரா. ஜெகநாதன்
TN QR code ( DIKSHA)
State Point of contact( SPOC)
0 Response to "DIKSHA வீடியோக்களை mp4 ஆக பதிவிறக்கம் பள்ளிகளில் போட்டு காட்டும் வசதி அறிமுகம் "
Post a Comment