
இந்தியாவின் மிகப்
பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ்
நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய ஷிவ் நாடார் தற்போது அனைத்து பணிகளில் இருந்து
விலகி உள்ளார்.
HCL நிறுவனம்:
HCL டெக்னாலஜிஸ்
லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு
உலகளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம், இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல்
தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர
உட்கட்டமைப்பு வசதிகள், பொறியியல்
நுட்பங்கள், ஆய்வுசார்
சேவைகள், போன்றவற்றை
வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக
இந்த நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தை
1976 ஆம் ஆண்டு ஷிவ் நாடார் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து கணினி தயாரிக்கும்
தொழிலில் ஈடுபட்டார். ரூ.20 லட்சம் முதலீட்டில் ஹெச்.சி.எல். நிறுவனம்
தொடங்கப்பட்டு இப்போது மிகப் பெரிய ஐடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த
நிறுவனம் இத்தகைய புகழ் பெற முக்கிய காரணம் இவர் தான். மேலும் இவர் உலகிலேயே
மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த
நன்கொடையாளரும் கூட. ஆதரவற்ற மாணவர்களின் கல்வி போன்ற விஷயங்களில் ஷிவ் நாடாரின்
அறக்கட்டளை மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
45 ஆண்டுகளாக இந்த
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய இவர் தற்போது அனைத்து பொறுப்புகளில்
இருந்தும் விலகியுள்ளார். 76 வயதாகும் அவர் ஜூலை 14ஆம் தேதி தலைமை மூலோபய அதிகாரி
மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகிய எஞ்சிய பொறுப்புகளில் இருந்தும் தன்னை
விடுவித்துக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை
தனது மகள் ரோஷினி நாடாரிடம் வழங்கினார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.42 லட்சம் கோடியாகும்.
தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான விஜய் குமாருக்கு நிர்வாக
இயக்குனர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
0 Response to "HCL நிறுவன பொறுப்புகளில் இருந்து ஷிவ் நாடார் விலகல் – யார் இவர்? "
Post a Comment