இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI தனது வாடிக்கையளர்களின் வீட்டுக் கடனில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. அதாவது இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடன் வட்டிக்கான சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுவாக SBI வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் வருமானவரியின் கீழ் வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், அந்த கடனுக்கான வட்டியில் தள்ளுபடியை கோருவதற்கு இந்த சான்றிதழ் கட்டாயமாகும். வழக்கமாக இந்த சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளை தேடி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது கொரோனா காலங்களில் வங்கிகளுக்கு சென்று இத்தகைய சேவைகளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதாக இல்லாததால், நீங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக
அதில் உங்கள் வங்கியை தேர்வு செய்து அதில் லாகின் செய்து கொள்ளவும்.
பிறகு Home Loan Int.Cert (Prov) என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
தொடர்ந்து எந்த கணக்கிற்கு வீட்டுக்கடன் வட்டி சான்றிதழ் வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
இவற்றை நீங்கள் PDF படிவமாக பதிவு செய்துகொள்ளலாம்.
இது தவிர SBI வாடிக்கையாளர்கள் Quick மூலமாகவும் இவ்வகை சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
0 Response to "SBI வங்கியின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வட்டி சான்றிதழ்!"
Post a Comment