புவியியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்

Trending

Breaking News
Loading...

புவியியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்

புவியியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்


பூமி குறித்தும் பிற கிரகங்களை ஆய்வுசெய்யவும் உதவும் புவியியல் படிப்பு படிப்பதற்கு என்னென்ன தகுதிகள் தேவை
? எதிர்காலத்தில் புவியியல் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? எந்தெந்தத் துறைகளில் புவியியல் பட்டதாரிகளுக்கு வேலை? புவியியல் படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் என்ன? என்பதுபற்றி பார்க்கலாம்.
 
புவியியல் படிப்பு என்றால் என்ன?
 
நாம் வாழும் பூமியைப் பற்றி அறிந்து கொள்ள புவியியல் படிப்பு உதவும். இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனித புவியியல் உள்ளிட்டவை இதன் அடிப்படை படிப்புகளாக இருக்கின்றன. புவியியலை இயற்பியல் புவியியல், மனித சம்பந்தப்பட்ட புவியியல் என இரண்டாகப் பிரிக்கலாம். தொழில்நுட்பம் மிகுந்த நவீன காலகட்டத்தில் புவியியல் துறை வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் சில கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் புவியியல் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
 
வெளிநாடுகளில் ஊக்கத்தொகையுடன் படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. பி.எஸ்.சி. பாடப்பிரிவில் புவியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. அறிவியல் பிரிவு மாணவர்களும் புவியியல் படிப்பில் சேரலாம்.
 
தற்போது புவியியல் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. புவியியல் படிப்புகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. முதுகலை புவியியல் முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. மத்திய, மாநில நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. திறமை இருந்தால் வேலை நிச்சயம் என்பது மட்டும் நிதர்சனம்.
 
பட்டயப்படிப்பு: பயன்பாட்டு புவியியலில் அசோஷியேட் டிப்ளமோ
 
இளநிலை: பி.எஸ்.சி. இன் ஜியோலஜி, பி.எஸ்.சி. ஹானர்ஸ் இன் ஜியோலஜி
 
முதுநிலை: எம்.எஸ்.சி. இன் ஜியாலஜி, எம்.எஸ்.சி. இன் அப்ளைடு ஜியாலஜி, எம்.எஸ்.சி. இன் அப்ளைடு ஜியாலஜி & ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ், எம்.எஸ்.சி. இன் பெட்ரோலியம் ஜியாலஜி, எம்.எஸ்.சி & டெக்னாலஜி இன் ஜியாலஜி
 
மேலும் எம்.ஃபில், பி.எச்.டி வரை படிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் 15-க்கும் அதிகமான கல்லூரிகளில் இப்படிப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
 
வேலை வாய்ப்புகள்: ஆசிரியர், ஆராய்ச்சியாளர், நில அதிர்வு நிபுணர், கடல்சார்வியலாளர், வானிலை ஆய்வாளர், புவியியல் ஆலோசகர், காற்றுவள மதிப்பீட்டின் தலைவர்
 
அடிப்படை சம்பளம்: இளநிலை முடித்தவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்கிறது. மேலும் துறையைப் பொறுத்து அடிப்படை சம்பளம் வேறுபடும். இஸ்ரோவில் பணியாற்றவும் வாய்ப்புகள் உண்டு
 

0 Response to "புவியியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel