1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!

Trending

Breaking News
Loading...

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!


கர்நாடகாவில்
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 30ம் தேதி முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடத்தப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் முலமாக நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்விற்காக கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பிறகு கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசுகள் ஈடுபட்டன.

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் தொற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாநிலங்களாக முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. அதே போல் கர்நாடகாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரை வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து வல்லுநர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

0 Response to "1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel