செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

Trending

Breaking News
Loading...

செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!


ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு மாத விடுமுறைகளை மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் வழங்கி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு
12 நாட்கள் விடுமுறை வழங்குகிறது.

வங்கி விடுமுறை:

நமது பணத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் உள்ளன. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணை படி, வார இறுதி நாட்களை தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

மேலும் வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. ஆனால் இந்த பண்டிகை அனைத்தும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். விநாயகர் சதுர்த்தி ஆனது நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 5,11,12,19,25 மற்றும் 267 முதலியன வார இறுதி நாட்கள் என்பதால் அன்று வங்கிகள் இயங்காது. அதனை தொடர்ந்து

·         செப்டம்பர் 8: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பண்டிகை (கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது)

·         செப்டம்பர் 9: ஹரித்தலிகா தீஜ் பண்டிகை. (கேங்டாக்கில் வங்கிகள் செயல்படாது)

·         செப்டம்பர் 10: விநாயகர் சதுர்த்தி (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)

· செப்டம்பர் 11: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இரண்டாம் நாள் (பல இடங்களில் விடுமுறை)

·       செப்டம்பர் 17: கர்மால் பூஜை (ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை )

·         செப்டம்பர் 20: இந்திர யாத்திரை பண்டிகை (கேங்டாக்கில் வங்கிகள் செயல்படாது)

· செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் (கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

வார இறுதி நாள் மற்றும் விநாயகர் சதுர்தி அன்று மட்டுமே தமிழகத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது.


 

0 Response to "செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel