
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்ந்து 2,000 ஐ நெருங்கி வரும் நிலையில், இன்றைய பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது.
இதனால் தமிழக அரசு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தியது. தொடர்ந்து
மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா
பாதிப்பு குறைந்து வந்த நிலையில், திடீரென்று சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்றைய
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசின் அறிக்கையின் படி, இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 20,363 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 3.20 கோடிக்கும் மேல் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும்,
4.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் தமிழகத்தில் 27 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,930 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தொற்று
பதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,24,400 ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!"
Post a Comment