செப். 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Trending

Breaking News
Loading...

செப். 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

   செப். 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு



செப்.
1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அங்கன்வாடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற, காலாவதியான பொருட்களை சுமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. செப். 1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்தணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 11.30 முதல் 12.30 மணி வரைக்குள் உணவு வழங்குவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.

 

அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். வளாகங்கள், சமையறை உள்ளிட்டவற்றை தூய்மைபடுத்திய பின்பே பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் விரல்களில் நகப்பூச்சு பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்திற்குள் நுழையும் போது பணியாளர்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to " செப். 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel