
தமிழகத்தில் வரும்
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள்
திறப்பதாக அரசு முன்னதாக அறிவித்த நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில்
திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு உறுதி
அளித்துள்ளது.
கல்வி நிலையங்கள்
திறப்பு:
தமிழகத்தில் வரும்
புதன்கிழமையான செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் 9 முதல்
12ம்
வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்
கடந்த கல்வியாண்டில் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும், தற்போது, மாநிலத்தில்
கொரோனா குறைந்து உள்ளதால் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு
குறைந்த மற்ற மாநிலங்களில் முன்னதாகவே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில்
கல்வி நிலையங்களை திறக்க பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதனால் தமிழக அரசு பல கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு கல்வி நிலையங்களை
திறக்க முன்னதாக திட்டமிட்டது.
இந்நிலையில், தமிழகத்தின்
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழகத்தில்
பள்ளிகளை திறப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
எதிர்க்கட்சியினர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி நிலையங்களை திறக்க தடை
விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்
முக ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுதுறை
செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது.
தொடர்ந்து கேரளா
மாநிலத்தில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை
திறக்கும் முடிவை தள்ளி வைக்கலாமா என்றும், தமிழக, கேரளா மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில்
மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை தொடருவது பற்றி சுகாதாரத்துறையினர்
முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அரசு முன்னதாக திட்டமிட்டபடி வரும்
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் அரசு
தெரிவித்துள்ளது.
வழிகாட்டுதல்கள்:
·
செப்டம்பர்
1ம்
தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
·
பள்ளிகள்
திறக்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரி விடுதிகளும் செய்லபட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் விடுதிகளும் செயல்பட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
·
விடுதிகளில்
பணியாற்றும் விடுதி காப்பாளர், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் கட்டாயம்
தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
·
கேரளாவில்
இருந்து வரும் மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன், ஆர்.டி.பி.சி.ஆர்
சோதனை சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
·
கொரோனா
பரவலின் அடிப்படையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த கட்டுப்பாடு
நடவடிக்கைகளை எடுக்கலாம்.
·
செப்டம்பர்
1ம்
தேதி முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஐ.டி.ஐ , பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரும் அரசு பேருந்துகளில்
கல்வி நிலையத்தின் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
·
பள்ளிகளில்
செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திட்டமிட்டபடி திறப்பு – அரசு அறிவிப்பு!"
Post a Comment