பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு - 20.09.2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வியின்கீழ் 2021-22 - ஆம் ஆண்டிற்கான 6-19 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய
குழந்தைகளைக் கண்டறியும் கணக்கெடுப்பு பணி 10.08.2021
முதல் நடைபெற்று வருகிறது.
இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் EMIS common pool- ல் உள்ள
மாணாக்கர்களின் விவரங்களை நேரடியாக ஆய்வு செய்யவும் , வீட்டு வாரியான கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில் சேராத குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31.08.2021 - க்குள்
இக்கணக்கெடுப்பு பணியினை நடத்தி முடிக்க இயலாததால் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும்
முழுமையாக பின்பற்றி இக்கணக்கெடுப்பு பணியினை 20.09.2021 அன்று
வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் , தற்பொழுது
9 - ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை 01.09.2021 அன்று
பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் மாணாக்கர்கள் யாரேனும் பள்ளிக்கு வருகை புரியாமல்
இருந்தால் , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது
0 Response to "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு - 20.09.2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!"
Post a Comment