ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய
வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab Usage மற்றும் ICT ஆகியவற்றில் திறன்
வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில்
நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக , முதற் கட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 12.08.2021 முதல் 18.08.2021 வரை 05 நாட்கள் பயிற்சி முடிக்கப்பட்டு , இரண்டாம் கட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை 05 நாட்கள் நடைபெற்று வருகிறது. மேற்காண் பயிற்சி அனைத்து நிலை
ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே , மூன்றாம் கட்ட பயிற்சியானது 31.08.2021 முதல் 05 நாட்கள் பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்கப்பட உள்ளது .
* வட்டார வள மைய ( பொ
) மேற்பார்வையாளர் தங்கள் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் பயிற்சி பெற உள்ள
ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து கீழ்கண்ட Excel படிவத்தில் 26.08.2021 அன்று மாலை 04.00
மணிக்குள் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு
அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . ( எக்காரணம் கொண்டும் குறு வளமையம் மூலம்
மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது )



0 Response to "ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு."
Post a Comment