கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!

Trending

Breaking News
Loading...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!


கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து
5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பு நடவடிக்கை:

கொரோனா தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என அச்சுறுத்திய நிலையில் மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் அலையின் தாக்கத்தினால் இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் மருத்துவனைகளும் நிரம்பி வழிந்தது. எனவே நோய்த்தொற்று பரவும் விகிதத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கூடுவது தடுக்கப்பட்டதால் நோய் பரவும் விகிதம் கணிசமாக குறைந்தது.

எனவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் 32,801 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,801 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றால் 198 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்தல், பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தல், கொரோனா தடுப்பூசியை செலுத்துவது, தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்தல் ஆகிய 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

0 Response to "கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel