
தமிழகத்தில் திருவள்ளூர்
மாவட்டத்தில் கடமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (07.08.2021)
ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் திமுக தலைமையிலான
அரசு மின்சாரத்துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு புதிய
நடைமுறைகளையும், சலுகைகளையும் வழங்கி
வருகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த நடவ்டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மின் தொடர்பான புகார் அளிக்க புகார் மையங்கள் அமைக்கப்பட்டு மின்
விநியோகம் குறித்த பிரச்சனைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது.
அதனை தொடர்ந்து தமிழகம்
முழுவதும் அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் மின் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் அனைத்து
பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் நடைபெற்று வருகிறது.அதனால் குறிப்பிட்ட நேரம்
மின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வாரியம் மின் விநியோகத்தை மின் வாரியம்
தடை செய்து வருகிறது.
மற்ற பகுதிகளை தொடர்ந்து
திருவள்ளூர் மாவட்டத்தில் கடமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
காரணமாக அகரம். கடம்பத்தூர், காரணி, திருப்பாச்சுர், சத்தரை, ஆட்லப்பாக்கம், பழையனூர், நெமிலி, மணவூர், களியனூர், சின்னம்மாபேட்டை, களக்காட்டூர் போன்ற பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் (07.08.2021)
ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது
0 Response to "திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! "
Post a Comment