
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா
மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக ஆகஸ்ட் 8 ம் தேதி அமாவாசை அன்று கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய
மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
பக்தர்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை
மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக தடுப்பு பணிகள் துரிதபடுத்தப்பட்டு வருகிறது. இந்த
நிலையில் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் முழுமையாக செலுத்தி முடிக்கப்படவில்லை.
மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதால் மக்கள்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. தொற்று
அதிகரிக்கும் இந்த நேரத்தில் ஆடி 18 ம் பெருக்கு, ஆடி அமாவாசை, கிருத்திகை போன்றவை முக்கிய விசேஷ நாட்களில் அனைத்து ஆலயங்களிலும் மக்கள்
கூட்டம் அதிகரிக்கும்.
இது மேலும் கொரோனா பரவும்
வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் மாவட்ட நிர்வாகம் கோயில்களுக்கு பக்தர்களுக்கு
அனுமதியை தடை செய்து வருகிறது மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில்
ஆகஸ்ட் 8 ம் தேதி அமாவாசை
அன்று கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய மாவட்ட ஆட்சியர் தடை
விதித்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழக்கமான பூஜைகள்
மட்டுமே நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அருள் தீர்த்தகீர்வார், அதியமான் கால பைரவர், முத்தம்பட்டி ஆஞ்சநேயர், சென்னியம்மன் திருக்கோயில், ஆகிய திரு கோவில்களில் ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை
விதிக்கப்பட்டுள்ளது ஒகேனக்கல் மற்றும் காவேரி போன்ற ஆற்றங்கரை பகுதிகளில் மக்கள்
கூட அனுமதி கிடையாது. சிறப்பு தினத்தன்று சுவாமிக்கு பூஜைகள், கோவில் ஊழியர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
0 Response to "ஆகஸ்ட் 8ம் தேதி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – ஆட்சியர் அறிவிப்பு!"
Post a Comment