
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு
கூடுதலாக இரண்டு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் அளிப்பதாக குடியரசுத் தலைவர்
உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு:
பன்வாரிலால் புரோகித் அவர்கள் 10940ம் ஆண்டு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பிராந்தியத்தை சேர்ந்தவர். இவர் அரசியல்
மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு
செப்டம்பர் 30
ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு
அக்டோபர் 6 ம் தேதி
முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா
பானர்ஜி பன்வாரிலால் அவர்களுக்கு தமிழக ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவரது
பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. சமீப நாட்களில் மத்திய அரசு பல
மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். கடந்த வாரம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,
பஞ்சாப் மாநில ஆளுநரும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும்
இருந்து வந்த வி பி சிங் பட்னோர் தனது பதவிக்காலம் கடந்த 20ம் தேதி
நிறைவடைந்த நிலையில், ராஜினாமா செய்தார்.
இதனால், தமிழக
ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களின் ஆளுநராக
கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் அசாம்
மாநில ஆளுநராக பணியாற்றி உள்ளார்.
0 Response to "தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு கூடுதல் பொறுப்புகள் – குடியரசுத் தலைவர் உத்தரவு!"
Post a Comment