சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர்!

Trending

Breaking News
Loading...

சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர்!

சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர்!


சென்னையில் உள்ள சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களது வீட்டில் குடி இருப்பவர்கள் பற்றிய தகவல்களை அருகில் இருக்கும் காவல்நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தலைநகர் சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களது வீட்டில் குடி இருக்கும் நபர்களின் விவரங்களை அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று தான். மக்களின் பாதுகாப்பிற்காக இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் மக்களுக்கு அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கி இருக்கும் வாடகைத்தார்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். வாடகைதாரர் குடி வந்த 15 நாட்களுக்குள் வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் காவல் நிலையங்களில் உள்ள கணினியில் பதிவு செய்யபடும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் இந்த விவரங்களை காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்ற செயல்களை செய்து விட்டு குற்றம் புரிந்தவர்கள் தப்பி ஓடி விடுகின்றனர் அதனை தடுக்கவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களின் ஆதார் கார்டு விவரங்கள் காவல் நிலைய அதிகாரிகளிடம் இருப்பதால் தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க இயலும்.

1 Response to "சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர்!"

  1. மிகச்சரியான வழிகாட்டுதல்தான்.

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel