தமிழகத்தில்
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா
இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்க முடிவு
செய்யப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று
முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு
நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவர்களின்
நலன் கருதி கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தொடர்ந்து பள்ளி அலுவலக பணியாளர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் அனைவரும், தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை
நாளைக்குள் (27.08.2021) பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசிகள் செலுத்தாத
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி
சான்றிதழில், இரண்டு தவணை தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தியதாக பதிவாகி உள்ளது. இதனால்
ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. மேலும் இந்த சான்றிதழை
தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
0 Response to "தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!"
Post a Comment