அதிமுக முதல்வர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம்’ – முக ஸ்டாலின் கூறியதாக அமைச்சர் தகவல்!

Trending

Breaking News
Loading...

அதிமுக முதல்வர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம்’ – முக ஸ்டாலின் கூறியதாக அமைச்சர் தகவல்!

அதிமுக முதல்வர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம்’ – முக ஸ்டாலின் கூறியதாக அமைச்சர் தகவல்!


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப்பையில் இடம் பெற்றிருக்கும் அதிமுக முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் பெருந்தன்மை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் புத்தகப்பை, மடிக்கணினி, சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் தேவையினை அறிந்து கொண்டு தமிழக அரசு இந்த முறையினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஆட்சி அமைந்ததில் இருந்து முக ஸ்டாலின் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பினை சம்பாரித்து உள்ளார்.

இந்த சூழலில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்டாலின் குறித்த ஒரு விஷயத்தினை தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப்பை, மடிக்கணினி மற்றும் இதர பொருட்களில் அதிமுக அரசின் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததால், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்று முதல்வர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, புகைப்படங்களை மாற்றுவதற்காக செலவு செய்ய இருக்கும் 13 கோடி ரூபாய் பணத்தினை பள்ளி மாணவர்களின் நலனுக்காக என்று உள்ள வேறு சில திட்டங்களில் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைத்ததும் முன்னாள் ஆட்சி புரிந்தவர்களின் புகைப்படங்களை அப்படியே வைத்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள பெருந்தன்மையான குணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

0 Response to "அதிமுக முதல்வர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம்’ – முக ஸ்டாலின் கூறியதாக அமைச்சர் தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel