திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!


தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான ‘தாலிக்கு தங்கம்
திட்டம் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

தாலிக்கு தங்கம்:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும், அல்லது வேறு ஏதேனும் திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதையும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும். மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மனு தள்ளுபடி செய்திட வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை அரசு அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் உண்மையாகவே ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும் என்பதும் கிறிப்பிடத்தக்கது.

0 Response to "திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel