
பொறியியல்
மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இன்று
முதல் ஆர்வமுள்ள மாணவர்கள் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
கேட்
தேர்வு:
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய
உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில்
சேர்வதற்கு கேட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் கேட் தேர்வை நடத்தி வரும் நிலையில் தற்போது
இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கைக்கான கேட்
நுழைவு தேர்வானது பிப்ரவரி மாதம் நடைபெறும். 2022-23 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான
கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என
கூறப்பட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 20 பாடப் பிரிவுகளில் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
கேட் தேர்வு எழுத ஆன்லைன் விண்ணப்ப
பதிவானது ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறும் என
அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கேட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை இன்று
முதல் பெற்று கொள்ளலாம். https://gate.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 24ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து தேர்வுக்கான அனுமதி சீட்டு ஜனவரி 3ல் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்றும்
தேர்வு முடிவு மார்ச் 17-ல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "பொறியியல் மேற் படிப்புகளில் சேர்வதற்கு கேட் தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!"
Post a Comment