
இந்தியாவில் தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு
இந்த வருடம் ஆன்லைன் மூலம் 30.11.2021 மற்றும் 5.12.2021 ஆகிய தினங்களில்
நடைபெறும் என்று என். சி.ஆர்.டி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
திறனறித்தேர்வு:
இந்தியாவில் மாணவர்களிடம் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில்
ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் விழிப்புணர்வு திறனறித்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த
தேர்வின் முக்கிய குறிக்கோள் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது
ஆகும். இத்தேர்வை எழுதும் மாணவர்கள் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சிகளில்
பங்கேற்பதற்கான ஊக்கம் பெறுவர். மேலும் அறிவியல் பாடத்தை விரும்பி படிக்கும்
ஆர்வமும் அதிகரிக்கும்.
இந்த தேர்வை இந்திய அரசின் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும்
விஞ்ஞான் பிரசார் நிறுவனம் மற்றும் விபா நிறுவனம் (NCERT) இணைந்து நடத்துகிறது.
இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. மாணவர்கள்
லேப்டாப்,
கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் மூலம்
தேர்வை எழுதலாம். 30.11.2021 (செவ்வாய் கிழமை)
அல்லது 5.12.2021
(ஞாயிற்றுக்கிழமை)
ஆகிய தினங்களும் திறனறித் தேர்வு நடைபெறும் என்று என்.சி.ஆர்.டி தெரிவித்துள்ளது.
மொத்தம் 1.30 மணி நேரம்
நடைபெறும்.
தேர்வினை காலை 10 மணி முதல் இரவு 8 மணிக்குள் பள்ளி
மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். அறிவியல் விழிப்புணர்வு திறனறித்
தேர்வு தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு போன்ற
பிராந்திய மொழிகளிலும் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க 30.09.2021
கடைசி
தேதியாகும். மேலும் இத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயாகும். அறிவியல்
திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும்
உதவித்தொகை வழங்கப்படும். ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே இத்தேர்வினை எழுத முடியும்
என்று என்.சி.ஆர்.டி தெரிவித்துள்ளது.
0 Response to "பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு – தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித்தேர்வு!"
Post a Comment