தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப
பதிவு இன்றுடன் ஆகஸ்ட் (09.08.2021) முடிவடைகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக
உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலானா மதிப்பெண்கள் கடந்த ஜூலை 19ம் தேதி இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கொரோனா பரவும் அச்சத்தால் பெற்றோர்களும், மாணவர்களும் கூடுவதை தவிர்க்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதால் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த இணையதளத்தில் 150 கலை, அறிவியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை
இன்றுடன் (09.08.2021) நிறைவு
பெறுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளதாகவும், அதில் 1,90,000 பேர் கட்டணத்தை
செலுத்தியுள்ளனர் என்று உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
0 Response to "தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று கடைசி நாள்! "
Post a Comment