
தற்போது கொரோனா தடுப்பு பணியின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும்
நிலையில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் செல்வதற்கான வாய்ப்புகள் அமையாத நிலையில்
அதற்கான மாற்று வழிகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாற்று வழி:
கல்லூரிகளில் B.E மற்றும் B.Tech படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில்
அந்த பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படுகின்றது. பாடம் நடத்துவது தேர்வு
வைப்பது மற்றும் இன்டர்ன்ஷிப் குறித்த அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி
கவுன்சில் முடிவு செய்து விதிகளை விதித்து வந்தது. அதனை தொடர்ந்து மாணவர்களின்
திறனை தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் என்று படிப்பு சார்ந்த துறை
அல்லது தொழிற்சாலைகளில் நேரடியாக ஈடுபடுவது வழக்கமான ஒன்று.
தற்போது கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் கல்லூரி வராமல் ஆன்லைன் மூலமாக
தமது படிப்பை தொடரும் பட்சத்தில் இன்டர்ன்ஷிப் செல்வதற்கான சூழல் ஏற்படவில்லை.
மேலும் இதற்கு 3 கிரெடிட் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். எனவே அதற்கான மாற்று ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்டர்ன்ஷிப் செல்வதன் மூலம் வழங்கப்படும் மதிப்பெண்ணுக்கு
பதிலாக மாணவர்கள் மத்திய அரசின் ஸ்வயம் மற்றும் தேசிய உயர் கல்வி நிறுவனங்களான
ஐ.ஐ.டி., – என்.பி.டி.இ.எல்., போன்ற திறந்த நிலை ஆன்லைன் வழி தடத்தில், சான்றிதழ் படிப்புகள் மேற்கொள்ளலாம்
என கூறப்பட்டுள்ளது.
அதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சான்றிதழ் படிப்புகள்
மட்டுமே மாணவர்கள் படிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவ்வாறு
மேற்கொள்ளப்படும் சான்றிதழ் படிப்புக்கு இன்டர்ன்ஷிப்க்கு வழங்கப்படும் சமமான
மதிப்பெண் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக
மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவானது இந்த ஆண்டு மட்டும் அமலில் இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு! "
Post a Comment