அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Trending

Breaking News
Loading...

அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்
, மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
 
 
இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய, கணக்கெடுப்பு பணிகளை, பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குநர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:
 
 
 
அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை, ஆக., 1ம் தேதி நிலவரப்படி,மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி,கணக்கெடுக்க வேண்டும். வகுப்பு வாரியாகவும்,தமிழ், ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும். முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால், அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது.
 
 
 
இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வி துறையில், கல்வி மேலாண்மை, 'டிஜிட்டல்' தளமான, 'எமிஸ்' வழியாக, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து 20.08.2021 - க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) அவர்களது பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 Response to "அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel