![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphenrd9z_HeT4WtpQVkzoizvUJFD9B_Kyl_8HgUh6y2kMccEZh1CEA7rpMoXQIlShVSG5o4O7N_zQQNtoQ9PItGfOez293TAUAigC9sZu4-SBTz7F3-EioBBemXHa2DthQUP91f-2EPo_4/w640-h364/202108241941110264_Tamil_News_Tamil-News-Tamil-Nadu-today-1585-new-corona-infection_SECVPF.gif)
கேரளா மாநிலத்தில் கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளர்வுகளினால் தொடர்ந்து கொரோனா
பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிகிறது.
பாதிப்பு அதிகரிப்பு:
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா
தொற்றின் 2 ம் அலை
பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தீவிர ஊரடங்கு
கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா
பாதிப்பு குறைந்து வருகிறது. பல மாநிலங்களிலும் இயல்பு நிலை மீண்டும் மெல்ல
திரும்பி வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து
அதிகரித்து வந்தது.
இதனால் மாநில அரசு தீவிர நோய் தடுப்பு முயற்சிகளில்
ஈடுபட்டு வந்த போதிலும், கட்டுப்படுத்த
முடியவில்லை. இதனால் மத்திய அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளா மாநிலத்திற்கு உதவிக்கு
அனுப்பியது. இந்நிலையில், கடந்த வாரம்
கேரளா மாநிலத்தின் சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் ஊரடங்கு
கட்டுப்பாடுகளில் மாநில அரசு சில தளர்வுகளை அளித்தது. இதனால், கேரளாவில் தொற்று
பரவல் விகிதம் 19 சதவிகிதத்தை
தாண்டியதால் சுகாதாரத்துறை வல்லுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தின், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாவட்டங்களில் கொரோனா
பாதிப்பு அதிகம் உள்ளது.
கேரளா மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு
குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31,445 பேருக்கு புதிதாக தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. கடந்த 24
மணி
நேரத்தில் 215 பேர்
உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,972 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனை செய்யப்படுவோரில் 19.03
சதவீதத்தினருக்கு
நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா
ஜார்ஜ், அடுத்து
வரும் சில வாரங்கள் கேரளாவுக்கு சோதனையான காலகட்டமாக இருக்கும். கடந்த வாரம்
அளித்த தளர்வுகளின் விளைவால் வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இன்னும்
அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Response to "கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஓணம் பண்டிகை தளர்வுகள் எதிரொலி?"
Post a Comment