
NIT
மற்றும் IIT உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில்
எஸ்சி,
எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட ஒதுக்கீட்டில் காலியாக
இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் என
மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பணியிடங்கள்
நிரப்பல்
மத்திய அரசின் கீழ்
செயல்பட்டு வரும் IIT, NIT மற்றும் IIM உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள் மற்றும்
மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும்
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம்
அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் உயர்கல்வி துறை
நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில், ‘மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்தியா
முழுவதும் IIT, NIT மற்றும் IIM உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பொருளாதார பிரிவுகளில் பின்தங்கி இருக்கும் நபர்களுக்கான
இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் பேராசிரியர் பணியியிடங்களை நிரப்ப
வேண்டும். இப்பணிகள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் நிரப்புவதற்கு கல்வி நிறுவனங்கள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் கல்வி
நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கால அவகாசம்
கொடுக்கப்படுகிறது. இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மேற்கொள்ளப்படும்
அனைத்து விதமான நடவடிக்கைகளையும் உயர் கல்வி நிறுவனங்கள் அறிக்கையாக சமர்ப்பிக்க
வேண்டும். மேலும் ஆண்டுதோறும் மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் அறிக்கையில், இந்த காலிப்பணியிடங்கள் குறித்த
அறிக்கையும் தனியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் காலிப் பணியிடங்களை நிரப்புவது
குறித்து கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மத்திய அமைச்சகத்துக்கு மாதாந்திர
அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள்,
IIT, NIT, IIM உள்ளிட்ட
கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், தலைவர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை கட்டாயமாக
செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Response to "IIT, NIT & IIM உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் உத்தரவு!"
Post a Comment