ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், LPG சிலிண்டர் வீடு தேடி வரும் – இந்தியன் ஆயில் சூப்பர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், LPG சிலிண்டர் வீடு தேடி வரும் – இந்தியன் ஆயில் சூப்பர் அறிவிப்பு!

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், LPG சிலிண்டர் வீடு தேடி வரும் – இந்தியன் ஆயில் சூப்பர் அறிவிப்பு!


இந்தியன் ஆயில் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் புதிதாக இண்டேன் சிலிண்டர் பெறலாம் என தெரிவித்துள்ளது.
 


இண்டேன் சிலிண்டர்:


முந்தைய காலத்தில் வீட்டிற்கு தேவையான சமையல் சிலிண்டர் வாங்க அந்த நிறுவன அலுவலகத்தில் சென்று நீண்ட நேரத்தில் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து அதில் உங்களது சேவை எண்ணை டைப் செய்து புக்கிங் செய்யும் வசதி வழங்கப்பட்டது.


தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய வசதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது ஒரு இண்டேன் சிலிண்டர் இணைப்பை ஒரு மிஸ்டுகால் மூலம் பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. அதாவது 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வாட்ஸ்ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


உங்களது சிலிண்டர் தீர்ந்து விட்டால் உடனே 75888 88824 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் செய்தால் உடனே உங்களின் காலியான சிலிண்டருக்கு மாற்று சிலிண்டர் உங்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். மேலும் ஆன்லைன் மூலமாகவும் புக்கிங் செய்ய இந்தியன் ஆயில் ஒன் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் புக் செய்து உடனடியாக புதிய சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம்.

0 Response to "ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், LPG சிலிண்டர் வீடு தேடி வரும் – இந்தியன் ஆயில் சூப்பர் அறிவிப்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel