PF விதிகளில் புதிய மாற்றம் – செப்.1 முதல் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம்!

Trending

Breaking News
Loading...

PF விதிகளில் புதிய மாற்றம் – செப்.1 முதல் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம்!

PF விதிகளில் புதிய மாற்றம் – செப்.1 முதல் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம்!

 


வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) ஆணையம் தனது விதிகளில் புதிய மாற்றங்களை அறிவித்து உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர்
1ம் தேதி முதல் ஊழியர்கள் தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க ஆதார் என்னை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

EPFO விதிகள் மாற்றம்: 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) சந்தாதாரர்கள் பிஎஃப் பங்களிப்புகள் மற்றும் பிற சலுகைகளைப் பெற செப்டம்பர் 1 க்கு முன்பாக தங்கள் ஆதார் அட்டையை வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளுடன் இணைக்க வேண்டும். முந்தைய காலக்கெடு ஜூன் 1, 2021 உடன் முடிவடைய இருந்த நிலையில் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. UAN உடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். செப்டம்பர் 1, 2021 முதல், இத்தகைய இணைப்பு செய்யப்படாத கணக்குகளுக்கு பிஎஃப் செலுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN களுடன் ECR தாக்கல் செய்வதற்கான நடைமுறை தேதி செப்டம்பர் 1, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக EPFO ​​அறிவிப்பில் தெரிவித்துள்ளது. PF UAN உடன் ஆதார் இணைத்துள்ள ஊழியர்களுக்கு மட்டுமே ECR ஐ தாக்கல் செய்ய முடியும். மேலும் EPFO அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு ஆன்லைன் வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன்படி உங்கள் ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் மற்ற EPF நன்மைகளையும் பெற இயலாது. 

அனைத்து வங்கிகள், பிபிஎஃப் கணக்குகள் மற்றும் இஎஃப்பி கணக்குகளின் அடிப்படை பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது செய்யப்படாவிட்டால், வட்டி கடன் மற்றும் பணம் எடுத்தல் போன்ற பணிகளை செய்ய இயலாது. இதனால் செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக இந்த இணைப்பு செயல்முறைகளை முறையாக செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

0 Response to "PF விதிகளில் புதிய மாற்றம் – செப்.1 முதல் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel