தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு; (02.09.2021) 1,562 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகத்தில் கடந்த வாரம்
முதல் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, இன்று மேலும் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்று மட்டும் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று
பாதிப்பு கடந்த மாதம் முதல் மெல்ல குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழக அரசு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இருப்பினும், செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகை நாட்கள் வர உள்ளதால் அரசு இது
தொடர்பான வழிகாட்டுதல்களை முன்னதாகவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய 02.09.2021 கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக
வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்றை விட 02.09.2021 பாதிப்பு
அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் 02.09.2021 மட்டும்
புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது
நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 26,17,943 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 02.09.2021 மட்டும் தொற்று பாதிப்பினால் 20பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 34,961பேர் உயிரிழந்துள்ளதாக
அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,684 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 25,66,504ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16,478பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 02.09.2021 மட்டும் 1,59,962 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் இதுவரை 4,26,33,164 மாதிரிகள் கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 166 பேர் கொரோனானால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 02.09.2021 சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று
எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,396 பேருக்குத் தொற்று உள்ளது.
0 Response to "தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு; (02.09.2021) 1,562 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!"
Post a Comment