
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மறுதேர்வு எழுதிய பொறியியல் மாணவர்கள், தேர்வு எழுதிய விடைத்தாள்
நகல் மற்றும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள செப்டம்பர் 11 முதல் 15 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை
செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மறுதேர்வு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல்
மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தற்போது
மாநிலம் முழுவதும் நோய் தொற்று குறைந்து வந்ததையடுத்து நேற்று (செப்டம்பர் 1) முதல் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி
வகுப்புகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள்
ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்கள்
அனைவருக்கும் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.
அந்த வகையில் அண்ணா
பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர்
தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜனவரி
மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம்
வெளியானது. இந்த ஆன்லைன் தேர்வுகளில் ஏற்பட்ட சில முறைகேடுகளினால், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் தேர்வுகளை
நடத்துவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.
இந்த மறுதேர்வுகள் ஏப்ரல்
மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழத்தில்
பொறியியல் மறுதேர்வு எழுதியவர்கள் அவர்களது விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண்
சான்றிதழை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் படி மாணவர்கள் பயின்ற அந்தந்த கல்லூரி வாயிலாக, செப்டம்பர் 11 முதல் 15 ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை, கட்டுப்பாட்டு அலுவலக
இணையதளம் வாயிலாக கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Response to "அண்ணா பல்கலை மறுதேர்வுக்கான விடைத்தாள் நகல் – செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!"
Post a Comment