வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

Trending

Breaking News
Loading...

வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!


UIDAI வழங்கும் பிவிசி ஆதார் கார்டு பெற ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
 
பிவிசி ஆதார் கார்டு:
 
இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டை உள்ளது. மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை ஆதார் அமைப்பு வெளியிட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக எளிதாக மாற்றங்களை செய்யலாம். ஆதார் அட்டை ஏடிஎம் வடிவில் நாம் பயன்படுத்த எளிதாக உள்ளது.
 
தற்போதைய காலத்தில் ஆதார் கார்டு அனைத்து வேலைகளும் தேவைப்படுகிறது, அதனால் ஏடிஎம் கார்டு விசிட்டிங் கார்டுகள் போன்றே ஆதார் கார்டையும் எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்காக பிவிசி ஆதார் கார்டை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதற்கு பதிலாக இந்த பிவிசி கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த பிவிசி ஆதார் கார்டுகளை ஆன்லைன் மூலமாக எளிதாக விண்ணப்பிக்கலாம்.
 
ஆன்லைன் மூலம் பிவிசி ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை :
 
https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்ல வேண்டும்.
My Aadhaar” செக்சனில் உள்ள Order Aadhar PVC card” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 
அதன் பிறகு புதிய முகப்பு திரை உருவாகும் 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட வேண்டும்.
 
உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒடிபி அனுப்பவும். அதை உறுதி செய்த பிறகு ஆதாரின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யவும்.
 
இந்த பிவிசி கார்டுக்கு பெற 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பிவிசி கார்டு உங்களது வீட்டுக்கே ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

0 Response to "வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel