
தமிழகத்தில் வேளாண் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள் :
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு
வாரியம் (TRB)
மூலம் தேர்வு
நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்
சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில்
தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு
ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்வில் 40 வயதைக் கடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு
பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும்
என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அரசு தேர்வு
குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய
பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு, பி.எட் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ஒரே பிரிவை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது
மேலும் வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2021 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் உரிய சலுகைகள் வழங்கப்படும். முதலில் ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படும். அதே போல வேளாண் அறிவியல் பட்டதாரி பணியிடங்களுக்கும் விரைவில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே காலியிடங்களின் விவரங்களை உடனடியாக இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Response to "TN TRB அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – சுற்றறிக்கை வெளியீடு!"
Post a Comment