UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!

Trending

Breaking News
Loading...

UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!

UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!


இந்திய குடிமையியல் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு குறைந்த அளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
UPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

UPSC ஆணையம்:

இந்திய குடியியல் பணிகள் தேர்வு என்பது அகில இந்திய அளவில் இந்திய குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்ச கல்வித்தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும். இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்போட்டித்தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின் படி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடந்த ஆண்டு UPSC தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினரின் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதேபோல், இரண்டாம் ஆண்டாக தொடர்ந்து இந்த முறையும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினரின் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினரின் கட் ஆஃப் 894 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கட் ஆஃப் 907 ஆக உள்ளது.

நடப்பாண்டில் மூன்று கட்ட தேர்வுகளிலும் முறையே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கட் ஆஃப் 89.12 ஆக உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினரின் கட் ஆஃப் மூன்று கட்ட தேர்வுகளிலும் முறையே 77.55, 687, 894 ஆக உள்ளது. இதனால் 2019ல் தேர்வான பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினர் 78 மற்றும், 2020ம் ஆண்டு தேர்வான பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினர் 86 ஆக உள்ளனர். இதனால் UPSC தேர்வர்களிடையே ஆஃப் மதிப்பெண்கள் குறித்து பெருத்த சர்ச்சைகள் எழுந்துள்ளது.

1 Response to "UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!"

  1. ஓபிசி பிரிவினைக் காட்டிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பிரிவினர்கள் அறிவில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel