அக்.15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!

Trending

Breaking News
Loading...

அக்.15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!

அக்.15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!


தமிழகத்தில் நடப்பாண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 
15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு சரியாக செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சொத்து வரி:

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு செலுத்துபவர்களுக்கு ரூ.ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2021 – 22 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை மூலம் சொத்து வரி ரூ.375.59 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.225.13 கோடி என மொத்தம் ரூ.600.72 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுகளில் முதல் அரையாண்டு சொத்து வரி வசூலினை ஒப்பிடும்போது சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிதி ஆண்டினை தவிர்த்து இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டது.

சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 இன் படிஇரண்டாம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 1.10.2021 முதல் 15.10.2021க்குள் செலுத்திசொத்து வரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பெற்று பயனடையலாம். இவ்வாறு சொத்து வரியை 15 ஆம் தேதிக்கு பிறகு செலுத்தும் பட்சத்தில்செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to "அக்.15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel