
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்
தேர்வில் அரசு ஆவணங்களை திருத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி ஏற்கனவே 196 தேர்வர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்
இன்னும் 66
பேருக்கு கூடுதலாக
வாழ்நாள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வு
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் நிறுவனங்களில்
விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டது. அந்த
வகையில் போட்டித்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய அரசு ஆவணங்களை திருத்தி
தேர்வர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை
தொடர்ந்து அந்த தேர்வும் நிறுத்தப்பட்டு, முறைகேடுகளில் ஈடுபட்ட 196 நபர்களுக்கு போட்டித்தேர்வுகளில் கலந்து
கொள்ள வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.
இப்போது இடைநிறுத்தப்பட்ட இந்த தேர்வானது
வரவிருக்கும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான
விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மீண்டுமாக பாலிடெக்னிக் தேர்வுகளில்
அரசு ஆவணங்களை திருத்தி சுமார் 66 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி
அவர்களும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர்
தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது அக்டோபர் மாதம் நடத்தப்பட இருக்கும் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு இவர்களில் சிலர் ஏற்கனவே விண்ணப்ப பதிவுகளை செய்துள்ள நிலையில், அவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வு மோசடிகள் இன்னும் தொடர்ந்து வருவதால் இது தொடர்பான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Response to "தமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு – 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிப்பு!"
Post a Comment