
தமிழ்நாடு கருவூல
கணக்குத்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை
விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம்
செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.
அரசு
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில்
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி
பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. அரசு
துறைகளில் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம் மற்றும் மருத்துவ துறைகளில்
உள்ள காலிப்பணியிட விபரங்கள் வெளியிடப்பட்டன. மேலும் இம்மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப்
4
விஏஓ, குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய
கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூடுதல் கருவூல அலுவலர் பணியிடங்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. இதன் மூலம் பதவி உயர்வு
வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் ஏற்கனவே உள்ள காசாளர், கணக்கர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய காலிப்பணியிடங்களை
விரைந்து நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி புதிதாக அறிவிக்கப்படும் வட்டங்களில் சார்நிலை
அலுவலகங்களை புதிதாக தோற்றுவிக்க வேண்டும். அசிஸ்டென்ட் புரோக்ராமர் மற்றும்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசிடம்
கோரப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என்பதே பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனுப்புநர்
ReplyDeleteரா.பாலாஜி
நெம்பர். 77/47, திருப்பதி நகர் 4வது பிரதான சாலை,
கொளத்தூர்,
சென்னை- 600 099.
தொலைபேசி எண்: 9514993182; 8148935115
பொருள்:
மாற்றுத்திறனாளியான எனக்கு அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது தனியார் துறைகளில் வேலை வேண்டி விண்ணப்பம் - தொடர்பாக
ஐயா.
நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகின்றேன். எங்கள் குடும்பத்தில் நான்
தான் தான் மூத்த மகன். எனக்கு வேலை எதுவும் இல்லை. என் தாய், தந்தை வயதானவர்கள். அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மற்றும் பணிவும் மூத்த மகனாகிய எனக்கு உள்ளது. எனக்கு கடந்த சில வருடங்களாக வேலை எதுவும் இல்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1998ஆம் ஆண்டு பதிவு செய்தேன். பதிவு செய்து 24 வருடங்கள் ஆகியும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து இந்நாள் வரை வேலைவாய்ப்புக்கான எந்த நேர்காணலும் தகவலும் கிடைக்கப்பெறவில்லல. என்னுடைய வேலை வாய்ப்பு பதிவு அட்டை எண் (PH/50/2004). நான் பத்தாம் வகுப்பு படித்துள்ளேன். தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலையும். தமிழில் முதுநிலையும் தேர்ச்சி பெற்றுள்ளேன். கணிப்பொறியில் (Diploma in Computer Application) தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னுடைய கைப்பேசி எண் (9514993182). ஆகவே, ஐயா அவர்கள் மாற்றுத்திறனாளியான எனக்கு அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை கிடைத்திட ஆவண செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அம்மா நான் ஒரு மாற்றுத்திறனாளி. சி.எம் செல்லில் பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்தேன். மூன்று நாட்கள் முன்பு எனக்கு சி.எம். செல்லில் இருந்து பதில் வந்தது. அதில் உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது என்று வந்திருக்கிறது. பலதடவை பதிவு செய்தும் என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சி.எம் செல்லில் பதிவு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிகிறது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இணையத்தின் வாயிலாகவும் பலமுறை பதிவு செய்தேன். அதிலிருந்தும் எந்த பதிலும் இல்லை அம்மா.
அம்மா நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. பலவருடங்களாக எனக்கு வேலை எதுவும் இல்லை. என்னுடைய அம்மா, அப்பா வயது முதிர்ந்தவர்கள். எனனுடைய அம்மா, அப்பாவிற்கு நான் ஒரே ஒரு மகன்தான். எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை அம்மா.
எனக்கு தேவை ஒரு நிரந்தரமான வேலை அம்மா. வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு வேலை இருந்தால்தான் கடைசி காலம் வரைக்கும் என்னுடைய அம்மா அப்பாவை காப்பாற்ற முடியும் அம்மா.
அம்மா நான் முதலமைச்சர் ஐயா அவர்களை சந்திக்க வேண்டும். ஆனால் அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அம்மா்
அம்மா என்னுடைய இந்த கோரிக்கை மனுவினை மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு தாங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா