கிராம
உதவியாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் பணம் பிடித்தம் செய்யப்பட்ட
திட்டத்தை ரத்து செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது எதிர்த்து போராட்டம் நடைபெற்று
வருகிறது.
போராட்டம்:
தமிழகத்தின் 2003 ஆம் ஆண்டு முதல் கிராம உதவியாளர்களுக்கு
பங்களிப்பு ஓய்வூதியத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு பிடித்தம்
செய்யப்பட்டு வந்த திட்டத்தை நிறுத்துவதற்கு வருவாய் நிர்வாக ஆணையர்
உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த
நிலையில் இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கும்
போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு இடங்களை
தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம
உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அமைதி போராட்டம்
நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை மாவட்டத் தலைவர்
பரமசிவம் தலைமை ஏற்று நடத்தினார். கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை
வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு கிராம உதவியாளர்களின் கோரிக்கையின் மீது பரிசீலனை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என மாநில தலைவர் முத்தையா எச்சரித்துள்ளார். இது குறித்து விரைவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு – வருவாய் துறை ஊழியர்கள் அச்சம்!"
Post a Comment