தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!


படித்த மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு உதவித்தொகை:

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும்பட்சத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையானது முறையாக 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300-ம் வழங்கப்படுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600- வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது நேரடியாக ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் கோரம்பள்ளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கூறியுள்ளார்.

0 Response to "தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel