TN TRB தகுதித் தேர்வு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு! முதல்வரிடம் கோரிக்கை!

Trending

Breaking News
Loading...

TN TRB தகுதித் தேர்வு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு! முதல்வரிடம் கோரிக்கை!

TN TRB தகுதித் தேர்வு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு! முதல்வரிடம் கோரிக்கை!


அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தமிழக முதல்வரிடம் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மனு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,700 ஆசிரியர்கள் 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு 2010 ம் ஆண்டு ஆக.23ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை 2012 நவம்பர் 16ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு இல்லாமல் சேர்க்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 2013ல், சிறுபான்மை உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பலர் பயனடைந்தனர்.

ஆனால் சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,000 ஆசிரியர்கள், பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பணிவரன்முறை உள்ளிட்ட எந்த வழக்கமான நடைமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை. எனவே 2010 ஆக., 23 முதல், 2012 நவ., 11 வரை நியமனம் பெற்ற சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர்.

0 Response to "TN TRB தகுதித் தேர்வு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு! முதல்வரிடம் கோரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel