வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர்
3ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை ஆகும். 

 

உள்ளூர் விடுமுறை:

 

நாகர்கோவிலில் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இன்றைக்கு பேராலயமாக உயர்ந்து புகழ் பெற்றுள்ளது. இந்த பேராலயம் தமிழகத்தின் முதன்மை கத்தோலிக்க பேராலயம் ஆகும். இங்கு வந்து வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் கேட்ட வரம் தரும் சவேரியார் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கி டிசம்பர் முதல் வரை அதாவது 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா    நடைபெறும்

 

அதே போல இந்த ஆண்டும் திருவிழா நடைபெறவுள்ளது. கடந்த நவம்பர் 24ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சவேரியார் பேராலயம் மற்றும் வளாக பகுதிகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி அன்று காலை 11 மணியளவில் தேர் பவனி நடைபெறவுள்ளது. திருவிழா நடைபெற உள்ள உள்ளதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel