கோவை சிறுவன் விருது பெற்று சாதனை

Trending

Breaking News
Loading...

கோவை சிறுவன் விருது பெற்று சாதனை

கோவை சிறுவன் விருது பெற்று சாதனை

 


கோவை சிறுவன் விருது பெற்று சாதனை கோவை ராம்நகரை சேர்ந்த சிவக்குமார்-கோமதி தம்பதியின் மகன் ராணா (வயது
6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து, தனது 3 வயதில் கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ (மாடலிங்)ஒன்றில் முதல் முறையாக பங்கேற்ற ராணா முதல் பரிசு பெற்றார். 

இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ராணா கலந்துகொண்டு பல்வேறு பரிசு வென்றார். இதனால் பலரும் ராணாவுக்கு உற்சாகம் அளித்தனர். இந்தநிலையில் துபாயில் நடைபெற்ற சர்வதேச பேஷன் ஷோ போட்டியில் ஆன்லைன் மூலம் நடந்த தேர்வில் ராணா முதல்முறையாக கலந்து கொள்ள தேர்வு பெற்றார். 


இதில், 15 நாடுகளை சேர்ந்த குழந்தைகள் கலந்துக் கொண்டனர். தமிழகத்திலிருந்து இவர் மட்டுமே சென்றார்.இதில் கலாசார உடை, சிலம்பம், மேடை பேச்சு ஆகியவற்றில் கலந்து கொண்ட ராணா சிறுவர்களுக்கான சீனியர் பிரிவில் 2021-க்கான பட்டம் பெற்று அசத்தி உள்ளார். இந்தியா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ராணாவின் தாய் கோமதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

0 Response to "கோவை சிறுவன் விருது பெற்று சாதனை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel