ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடை வளா்க்கும் 10,320 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதித் திட்டத்தில் வங்கிகள் மூலம் கிஸான் கிரெடிட் கார்டு வழங்கப்படவுள்ளது.
இதற்காக சிறப்பு முகாம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்.
கிஸான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முன்பக்க நகல்,
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
0 Response to "கிஸான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்"
Post a Comment