
இந்தியாவின்
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரியால்டி கோல்ட் லோன்
ஸ்கீம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வங்கி தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கடன்:
எஸ்பிஐ வங்கி
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. அந்த
வகையில் கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
வங்கிகளுக்கு வருவதை தவிர்க்க டோர் ஸ்டெப் வங்கி சேவையை வழங்கியது. மேலும் எஸ்பிஐ
தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலம் ஆன்லைன் பணபரிவர்த்தனை வசதிகளையும் அளித்தது.
அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு செயலாக்க
கட்டணம் இன்றி வீட்டு கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் எஸ்பிஐ
கணக்குதரர்கள் இச்சலுகையை பெறலாம். அதனை தொடர்ந்து தற்போது வீடு கட்டுவதற்கு பணம்
பற்றாக்குறையாக உள்ளவர்களுக்கு எஸ்பிஐ ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் என்ற திட்டத்தை
கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தங்க நகைகளை வைத்து ஒருவர் ரூ.50,000 முதல்
அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். லோன்
பெறுபவர்களின் தங்க நகையின் தரம் குறித்து முறையாகச் சரிபார்க்கப்படும். மொத்த
கடன் தொகையின் மதிப்பில் 0.50 சதவீதம் செயலாக்க கட்டணமாக
வசூலிக்கப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாக எஸ்.பி.ஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருபவர்களுக்கு மட்டுமே இந்த ரியால்டி கோல்ட் லோன் வழங்கப்படுகிறது. மிரளும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் 36 மாதங்களில் நகைக்கடனை திரும்ப செலுத்த வேண்டும். புல்லெட் ரீபேமண்ட் கோல்ட் லோனை 12 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். ரியல்ட்டி கோல்ட் திட்டத்திற்கு வட்டியானது ஒரு வருட MCLR க்கு 7 சதவீதம் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.
0 Response to "சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – SBI வங்கியில் ரூ.50 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்!"
Post a Comment