மருத்துவம் சார்ந்த 19வகையான பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

Trending

Breaking News
Loading...

மருத்துவம் சார்ந்த 19வகையான பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

மருத்துவம் சார்ந்த 19வகையான பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!


மருத்துவம் சார்ந்த
19வகையான பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19வகையான பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.  

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பில் சேருவதற்காக 64 ஆயிரத்து 900 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,276 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 13,832 இடங்களுக்குமான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. https://www.tnhealth.tn.gov.in/,  https://www.tn.medical.org/ ஆகிய இணையதள பக்கங்களில் மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வருகிற 22-ந் தேதி ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வும், அதனை தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைஒட்டி, மது மற்றும் அசைவ பிரியர்களுக்காக வழக்கமாக சனிக்கிழமைகளில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் வரும் இரண்டு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தெரிவித்தார். 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புதிதாக எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரிடம் இருந்து பெறப்படும் எலும்புகளை 5 வருடம் பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

0 Response to "மருத்துவம் சார்ந்த 19வகையான பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel