வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது 2021 - ஆய்வாளர் ப. சரவணன், பழ. அதியமான், வி. மாதவன், என்பவர்களுக்கு இன்று (12.12.2021) வழங்கப்பட்டது.

Trending

Breaking News
Loading...

வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது 2021 - ஆய்வாளர் ப. சரவணன், பழ. அதியமான், வி. மாதவன், என்பவர்களுக்கு இன்று (12.12.2021) வழங்கப்பட்டது.

வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது 2021 - ஆய்வாளர் ப. சரவணன், பழ. அதியமான், வி. மாதவன், என்பவர்களுக்கு   இன்று  (12.12.2021) வழங்கப்பட்டது.



அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்  வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது இவ்வாண்டு ஆய்வாளர் ப. சரவணன், பழ. அதியமான், வி. மாதவன், என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று 12.12.2021 மிகச்சிறப்பாக நடைபெற்றது.  நீதியரசர் அரங்க. மகாதேவன் தனது சிறப்புரையில் விருது பெற்ற மூவரைக் குறித்து மிகச்சிறப்பாக  கூறினார். விருது பற்றியும் இன்று வழங்கப்பட்ட விருதும் விருதாளர்களின் ஆய்வுத்திறனையும் வெளிப்படுத்தியது உரைக்கு வலிமை சேர்த்ததாக அமைந்தது.  






விருதாளர்கள் தங்களின் ஏற்புரையை ஏற்றவிதம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக பழ. அதியமான் அவர்கள் இன்று வரை விருதுகள் எப்படி வழங்கப்பட்டன என்றும் அதன் சூட்சுமங்களை விளக்கிய விதம் நன்றாக இருந்தது. ப.சரவணன், அவர்கள் தனது  ஏற்புரையில் தனது தந்ததையை நினைவுகூர்ந்தது நெகிழ்வானதாக அமைந்தது.  இவரது பேச்சு தந்தைக்கும் மகனுக்குமான அன்பை  வெளிப்படுத்தியது. இதனைக் குழுமிருந்தவர்கள்  உணர்ந்து கொண்டனர்.  இதுவரை விண்ணப்பித்து விருது பெறவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. நன்றியுரையை டாக்டர் ஆனந்த் பழனிசாமி அவர்கள்  நன்றாக ஆற்றினார். நிகழ்வு சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்தவர்களையும் தேர்வுக்குழுவினரின் நேர்மையான செயலையும் குறிப்பிட்டு பேசியது  விருதின் தன்மையை மேலும் உயர்த்தியது.

நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர் ய. மணிகண்டன், ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி மற்றும் தமிழ் ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், படைப்பாளர்கள் என அரங்கம் நிறைய பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.











தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளருமான முனைவர் நா. அருள்முருகன் அவர்களும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தார்.  நிகழ்வை  பேரா. உலகநாயகி பழனி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

0 Response to "வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது 2021 - ஆய்வாளர் ப. சரவணன், பழ. அதியமான், வி. மாதவன், என்பவர்களுக்கு இன்று (12.12.2021) வழங்கப்பட்டது."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel