23 வருடங்கள் கழித்து 19.12.2021 சந்தித்துக்கொண்ட கோடம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ..

அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொண்ட நாளில் தங்களுக்கு முதன் முதலில் பாடம்
கற்றுத்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தனர். மேலும் அனைவரும் தங்களுடைய பள்ளி நினைவுகளை மீண்டும் பேசி 23 ஆண்டு
காலத்திற்குப் பயனம் செய்தனர்.
இந்த விழாவை பத்மநாபன், மனோ, மாலினி, ஜெயா, புனிதா,
வனிதா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். விழாவில் கலந்து கொண்ட
முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட
நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாகவும் மறக்க முடியாததாகவும் அமைந்தது.
நிகழ்வின் இறுதியில் மனோ
அவர்கள் கூறிய நன்றியுரையும் சிறப்பானதாகவும்
நகைச்சுவையாகவும் இருந்தது.
மண்ணாங்கட்டியக
இருந்த இந்த மனோவை கூட மாமேதை ஆக்கிய உங்களுக்கு முதல் நன்றி
23 ஆண்டுகள் பிரிந்திருந்த நண்பர்களை ஒன்று சேர்த்து சந்திப்பு விழா நடத்த
பாடுபட்ட என் தலைவி ஜெயா அவர்களுக்கு நன்றி கூறுவதா
அண்ணா
அண்ணா என்று அன்பு காட்டி பாசமழை பூட்டிய என் அன்புத்தங்கை மாலினிக்கு நன்றி
கூறுவதா
பொன்னேரியையும்
பொருட்படுத்தாமல் 38 கண்களைக் காண ஓடோடி வந்த என் வனிதாவுக்கு நன்றி
கூறுவதா
நண்பர்களை
எப்போது சந்திப்போம் என்ற ஆர்வம் காட்டிய என் அருமை தோழி புனிதாவுக்கு நன்றி
கூறுவதா
தலைவியை
யாரும் அண்டக் கூடாது என்று பாதுகாப்பான அரணை போட்ட என் மச்சி அருணுக்கு நன்றி கூறுவதா
இங்கிருக்கும்
தாய்குலத்தைப் பத்திரமாக கொண்டு வந்து கொண்டு சேர்த்த என் மச்சான் செந்திலுக்கு நன்றி
கூறுவதா
தன்னுடைய
தேனிசைக் குரலால்
தேவாமிருதத்தை அள்ளிக்கொடுத்த என் அன்பு மச்சி விஜய்க்கு நன்றி கூறுவதா
எங்கோ ஒரு
மூலையில் இருந்த எங்களை ஒன்றாக சேர்த்த என் அன்பு நண்பன் நாட்டாமை விஜயகுமாருக்கு
நன்றி கூறுவதா
காணக்கிடைக்காத
எங்கள்
கணக்குப்பிள்ளை
பட்ஜெட் பத்மநாபன் அவர்களுக்கு நன்றி கூறுவதா
ஆண்டவனாக
அருள்பாலித்த என் தாண்டாவனுக்கு நன்றி கூறுவதா
அமைதியாக இருந்து கொண்டு சந்திரமுகியாக பிரதிபலிக்கும் என்ன கொடும சரவணன்
சார் அவர்களுக்கு நன்றி கூறுவதா
எல்லோரும்
ஒரு கூட்டு பறவை என்று பிரதிபலித்த என் அன்பு மச்சான் மகேஷுக்கு நன்றி கூறுவதா
பல்வேறு
வேலைகளை ஒதுக்கி விட்டு வேலே இல்லாமல் வந்த என் வேல்முருகனுக்கு நன்றி கூறுவதா
லவ்பேர்ட்ஸ்
மாதிரி வந்த என் பிரஞ்ச் பேர்டு பாலமுருகனுக்கு நன்றி கூறுவதா
வருவாரா
மாட்டாரா என்று ஹார்ட் பீட் எகிற வைத்த என் பாலமணிகண்டனுக்கு நன்றி கூறுவதா
ஆயிரம்
பிரச்சனைகளையும் கடந்து வந்து நட்புயிர் ஊட்டிய என் பார்த்திபனுக்கு நன்றிக்
கூறுவதா
அமைதியாகவே
வந்து அமைதியாகவே சென்ற என் அன்பு நண்பன் சிரிச்சான் வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி
கூறுவதா
கடுமையான
வேலை நெருக்கடியும் ஒதுக்கிவிட்டு நண்பர்களைக் காண ஓடிவந்த என் அன்பு மச்சான் சவுண்ட் சர்வீஸ் ரமேஷ்
அவர்களுக்கு நன்றி கூறுவதா
இந்த
அருமையான நிகழ்ச்சியில் நனைந்து ஆனந்தக் கண்ணீர் சிந்திய என் அருமை மச்சான் ஜோ
அவர்களுக்கு நன்றி கூறுவதா
இப்படிக்கு
உங்கள் மனோ
0 Response to "23 வருடங்கள் கழித்து 19.12.2021 சந்தித்துக்கொண்ட கோடம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் .."
Post a Comment