பொதுத்தோ்வுக்கு
முன்கூட்டியே திட்டமிடும் வகையில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கை:
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை பள்ளிகள் முறையாகப்
பதிவுசெய்ய வேண்டும். இதன் அடிப்படையில்தான் அடுத்து வரும் ஆண்டுகளில் பிளஸ் 2,
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்த திட்டமிட முடியும்.ஏதேனும்
திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் செய்து கொள்ள முடியும்.
எனவே, தற்போது 9, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் விவரங்களை சிபிஎஸ்இ இணையதளத்தில் டிசம்பா் 15 முதல் இணையவழியில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 Response to "9, 11 வகுப்பு மாணவா் விவரங்களை பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவு."
Post a Comment